விவசாயி களுக்கான பிரத்யேக தொலைக் காட்சி அலைவரிசையான "தூர்தர்ஷன்-கிசான் டிவி'யை பிரதமர் நரேந்திரமோடி, வரும் 26-ம் தேதி தொடங்கிவைக்கிறார்.

இது தொடர்பாக மத்திய செய்தி, ஒலிபரப்பு அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:

விவசாயிகளுக்கான கிசான் தொலைக் காட்சி தொடக்கம் குறித்த ஆலோசனை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் சனிக் கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் அருண் ஜேட்லியும், இணை அமைச்சர் ராஜ்யவர்தன்சிங் ராத்தோரும், அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

வாரத்தின் அனைத்து நாள்களும், 24 மணி நேரமும் ஒளிபரப்பாகவுள்ள இந்த தொலைக் காட்சி அலைவரிசையை, பிரதமர் மோடி தில்லியிலுள்ள விஞ்ஞான்பவனில், வரும் 26-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

அமைச்சர் அருண்ஜேட்லி கடந்த ஆண்டு தாக்கல்செய்த மத்திய பட்ஜெட்டில், விவசாயிகளுக்கென பிரத்யேக தொலைக்காட்சி அலைவரிசை தொடங்கபடும் என்றும், அதற்காக ரூ. 100 கோடி ஒதுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க நாள், வரும் 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதேநாளில், விவசாயிகளுக்கான கிசான் தொலைக் காட்சி தொடங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags:

Leave a Reply