தமிழக சட்ட சபை தேர்தலில் பாஜக அதிமுகவுடனோ, திமுகவுடனோ கூட்டணிவைக்காது என்று மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாஜக தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சிக்குவந்த பிறகு ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாஜக ஆட்சியமைத்துள்ளது. ஜம்முகாஷ்மீரில் பாஜக ஆதரவுடன் ஆட்சி நடந்துவருகிறது. முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் 8 மாநிலங்களில் ஆட்சியை இழந்துநிற்கிறது.

சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர். சமூகபிரச்சனை ஏற்படாத வகையில் உள்நாட்டு பாதுகாப்பு மேம்படுத்தப் பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் பிரதமர் அலுவலகத்திற்கு ஏற்பட்டகளங்கம் தற்போது நீங்கியுள்ளது. நாட்டில் ஊழல் ஒழிக்கப் பட்டுள்ளது. மத்திய அரசு தனது எதிர் கால பாதையை தெளிவாக வகுத்து செயல்பட்டு வருகிறது. மீண்டும் தமிழக முதல்வராக பொறுப் பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். தமிழக அரசுடன் மத்திய அரசு நல்லுறவைபேணும். தமிழகத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கும். ஆனால் தமிழக சட்ட சபை தேர்தலில் அதிமுகவுடனோ, திமுகவுடனோ பாஜக கூட்டணிவைக்காது. தேர்தலுக்கு தனி உத்திவகுத்து பாஜக செயல்படும் என்றார்.

Leave a Reply