ஆர்எஸ்எஸ். இயக்கத்தின் போதனைகளை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார் பாஜக தலைவர் எல்.கே.அத்வானி.

கோட்டயம் அருகேயுள்ள அனிக்காடு பகுதியில் உள்ள 'அரவிந்தா வித்யா மந்திரம்' வெள்ளி விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அத்வானி கூறியதாவது:

"ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மிகப் பெரிய பங்களிப்பாக நான் கருதுவது என்னவெனில், பொது வாழ்க்கையில், அரசியலில் தீவிரமாக இயங்கினாலும் சரி, நாம் ஈடுபடும் ஒவ்வொரு காரியத்திலும் அறமதிப்பீடுகளுக்கு கடமைப்பட்ட வர்களாகவும், ஒழுக்க ரீதியாக நேர்மையாக செயல்படவும் ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்துவதே. இவ்வாறான மனோ பாவம் செயல்களில் பிரதி பலிக்காதவரை நாட்டுக்கோ, அரசியலுக்கோ சேவை ஆற்றமுடியாது"

குடும்ப வாழ்க்கையில் அறமதிப்பீடுகள், பொதுவாழ்க்கையில் அறமதிப்பீடுகள், கல்வியில் அறமதிப்பீடுகள் ஆகியவை ஒரு நாட்டை மகத்தானதாக உருவாக்குகிறது" என்றார்.

"நான் பயின்ற மொழிகளில் ஆங்கிலம் எனக்குவசதியாக இருக்கிறது. தேவனாகிரி மற்றும் இந்தி மொழியிலும் நான் வசதியாக உணர்கிறேன். நாட்டின் பலஇடங்களில் ஆங்கிலத்தில் சுலபமாக கருத்தை வெளிப்படுத்த முடிகிறது" என்றார்.

Leave a Reply