சேவை என்பது இந்திய நாட்டின் முதன்மை பணியாகும். கடந்த ஒரு ஆண்டுக்கு முன், என் மீது நீங்கள் நம்பிக்கை வைத்ததை மனதில் கொண்டு, பொறுப்பை உணர்ந்து பிரதம சேவையாளராக செயல்பட்டு வருகிறேன். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் என்னுடைய உடலையும், ஆற்றலையும் நாட்டுக்காக அர்ப்பணித்து உண்மையுடனும், நேர்மையுடனும் நடந்து வருகிறேன்.

நாங்கள் ஆட்சி அமைக்கும் போது, இந்தியஅரசின் மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் மங்கிக் கொண்டிருந்தது. கடுமையான ஊழல், முக்கிய முடிவெடுப்பதில் உறுதியின்மை ஆகியனவற்றால் அரசு முடங்கிப் போய் இருந்தது. விண்ணை முட்டும் பணவீக்கம், பொருளாதார நிலையற்ற தன்மை ஆகியனவற்றால் மக்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். அவசர கால அடிப்படையில், வலுவான முடிவெடுக்க வேண்டிய தருணம் அது.

அத்தகைய சவாலான சூழலில் ஆட்சிப் பொறுப்பை எடுத்துக் கொண்ட நாங்கள் இன்று ஓராண்டுக்கான தரச் சான்றிதழை உங்களிடம் சமர்ப்பிக்கிறேன். அந்த தரச் சான்றிதழில், தற்போதைய அரசு மேற்கூறிய சவால்களை முறையாக எதிர்கொண்டிருப்பது தெரியும்.

விலைவாசி உயர்வு உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. வீழ்ச்சியில் இருந்த பொருளாதாரம் புத்துயிர் பெற்றது. நிலையான கொள்கைகளை வகுத்து அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

நாட்டின் விலை மதிப்பில்லாத இயற்கை வளங்களை ஒரு சிலர் ஆதாயத்துக்காக ஒதுக்கீடு செய்யும் முறைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு வெளிப்படையான ஏல முறை அமலுக்கு வந்துள்ளது. கருப்புப் பண விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்தது, கருப்புப் பண சட்டத்தை நிறைவேற்றியது என முக்கிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. எண்ணமும், ஆக்கமும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியுடன் இருப்பதால் ஊழல் இல்லாத ஆட்சி நடைபெறுகிறது.

அரசு இயந்திரங்கள் செயல்படும் முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தொழில் நேர்த்தி மேம்படுத்தப்பட்டுள்ளது. அரசுப்பணிகள் நடைபெறுவதில் இருந்த தங்கு தடைகள் தகர்க்கப்பட்டுள்ளது.

அந்தோதயா கொள்கைகளால் வழிநடத்தப்படும் இந்த அரசானது ஏழைகளுக்காக, ஒடுக்கப்பட்டவர்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. வறுமை ஒழிப்புப் போரில், ஏழை எளிய மக்களை வீரர்களாக ஒருங்கிணைக்க அரசு முயற்சித்து வருகிறது.

பள்ளிகளில் கழிப்பறை வசதி ஏற்படுத்துதல் தொடங்கி ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களை கூடுதலாக அமைப்பது வரை பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது.

தூய்மை இந்தியா திட்டம் செயல்பட்டு வருகிறது. நாட்டில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்குதல், சாலை, ரயில் போக்குவரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

"பொதுமக்கள் மத்தியில் அரசுமீதான நம்பிக்கை மீட்டெடுக்கபட்டுள்ளது. பாஜக அரசு ஊழலற்ற ஆட்சியை உறுதிப் படுத்தியுள்ளது. மாநில அரசாங்கங்களை சரிநிகராக நடத்துவதன் மூலம் இந்தியாவின் ஒற்றுமை மேலோங்க வழிவகை செய்யப் பட்டுள்ளது.

எங்கள் லட்சியம், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும். ஒன்றுபட்டால், இந்திய தேசத்தின் கனவை, இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்ட தலைவர்களின் கனவை மெய்பிக்ககலாம். இதை நடத்திக்காட்ட, நான் உங்களது ஆசியையும், ஆதரவையும் வேண்டுகிறேன்."

பிரதமராக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதம நரேந்திர மோடி எழுதிய திறந்த மடல்

Leave a Reply