மேகி நூடுல்ஸில் அதிக அளவு வேதிப் பொருள்கள் கலந்துள்ளதாக வரும் செய்திகள் தொடர்பாக மத்திய அரசு ஆய்வு செய்யும்' என்று மத்திய உணவு, நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறினார்.

இதுதொடர்பாக, அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
நெஸ்லே நிறுவனத் தயாரிப்பான மேகி நூடுல்ஸில், மோனோசோடியம் குலாடாமேட் என்னும் வேதிப் பொருளும், ஈயமும் காணப்படுவதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பாக மத்திய அரசு ஆய்வு செய்யும்.

இதுகுறித்த விசாரணைக்குப் பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.

Tags:

Leave a Reply