மேகதாது விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராக மத்தியஅரசு செயல்படாது என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் தெரிவித்துள்ளார்.

கோவையில் ஈஷாமையம் சார்பில் நடத்தப்பட்ட விழாவில் பங்கேற்ற மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்று மரக் கன்றுகளை நட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர; 2ஜி மற்றும் நிலக்கரி முறைக் கேட்டில் தமக்கு உள்ள தொடர்புகுறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம் அளிக்க வேண்டும் . முல்லை பெரியார் மற்றும் மேகதாது நதி நீர் பிரச்சனையில் தமிழக மக்களுக்கு எதிராக மத்திய அரசு செயல் படாது என்றும் அவர் உறுதியளித்தார். மாநிலங்களிடையே மத்திய அரசு விரோதபோக்கை ஊக்குவிக்காது என்றும் பிரகாஷ் ஜாவ்டேகர் கூறினார்.

Leave a Reply