தீஸ்தா நதிநீர் பகிர்வு தொடர்பான ஒப்பந்தத்துக்கு இந்தியாவும், வங்கதேசமும் விரைவில் ஒப்புதல் அளிக்கஇருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

இருநாடுகளும் விரைவில் அந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்க இருக்கின்றன. இந்தவிவகாரத்தில், மேற்கு வங்கமாநில அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என நம்புகிறோம்.

இந்தியா, வங்கதேசம் இடையேயான நிலப்பகிர்வு ஒப்பந்தம் கடந்த 40 ஆண்டுகளாக முடங்கி கிடந்தது (இந்திய நாடாளுமன்றம் 40 ஆண்டுகளாக ஒப்புதல் அளிக்காததை இவ்வாறு குறிப்பிட்டார்). ஆனால், தற்போது அந்த விவகாரத்தில் முடிவெடுக்கப்பட்டு விட்டது.

கொல்கத்தா-அகர்தலா இடையே பேருந்துச்சேவை, விரைவில் தொடங்கப்படும். இப்பாதையில் பரிசோதனை முயற்சியாக ஏற்கெனவே பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

அனைத்து அண்டை நாடுகளுடனும் சுமுகமான உறவை வைத்துக்கொள்ள வேண்டும் என்றே இந்தியா விரும்புகிறது. அதேசமயம், எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியபோது, அதற்கு தக்கபதிலடியை இந்தியா கொடுத்தது.

பாகிஸ்தான் முன்பு அத்துமீறி தாக்குதல் நடத்தியபோது, நமது படையினர் வெள்ளைக் கொடியை காண்பித்தனர். ஆனால் தற்போது, பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்தும்போது, நமதுவீரர்கள் தகுந்தபதிலடி கொடுக்கின்றனர். இதனால், பாகிஸ்தான் ஐ.நா. சபையின் தலையிட்டைக் கோருகிறது.

சீனாவில் பிரதமர் நரேந்திரமோடி அண்மையில் பயணம் செய்தபோது, இருநாடுகளுக்கு இடையே தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்னைகள் குறித்து இந்தியாவின் நிலைப் பாட்டை எடுத்துரைத்தார் . என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Leave a Reply