கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சிதான் இந்தியாவை ஆண்டது. இதில் கடந்த 2004-2014-ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுக்கால ஆட்சியில் இந்தியாவின் நிலை அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. சர்வதேச அரங்கில் நமது நாட்டின் கௌரவம் கடுமையாக பாதிக்கப் பட்டது.

இதைமீண்டும் எவ்வாறு நிலை நிறுத்தப் போகிறோம் என்ற நிலை உருவானது.இந்நிலையில் கடந்த நாடாளுன்றதேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி மீது நம்பிக்கை வைத்து மக்கள் ஆட்சியில் அமர்த்தினர். இந்தியா வளர்ச்சி அடையும், வலிமைபெறும் என உள்நாட்டில் மக்கள் மத்தியிலும், வெளிநாடுகள் மத்தியிலும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.

ஓராண்டில் பா.ஜ.க. அரசு பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. குறிப்பாக மக்கள் நிதித்திட்டம், அனைவருக்கும் வங்கிக்கணக்கு, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு ரூ.40000 கோடி ஒதுக்கீட்டு மேம்படுத்துதல், விவசாயகடன் வழங்க ரூ.8.5 லட்சம் கோடி ஒதுக்கீடு, மேக் இன் இந்தியா திட்டம், தொழில் துறை வளர்ச்சி என பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையை 4 வழிப்பாதையாக மாற்ற மத்திய அரசு தயாராக உள்ளது. இச்சாலை தேசியநெடுஞ்சாலை இல்லை. எனவே தொடர்புடைய மாநில அரசுகள் ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் இத்திட்டம் மேற்கொள்ளப்படும். சுற்றுலாதலங்கள் அதிகம் நிறைந்துள்ள கடற்கரைப்பகுதி இதனால் பொருளாதர வளம்பெறும். புதுச்சேரியில் இந்திரா காந்தி சதுக்கம், ராஜிவ்காந்தி சதுக்கம் பகுதியில் மேம் பாலங்கள் கட்ட வேண்டும் எனக் கோரியுள்ளனர். இத்திட்டத்துக்கு ரூ.100 கோடி ஆகும் எனத் தெரிகிறது. இத்திட்டத்தை கண்டிப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுச்சேரி துறை முகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது. மத்திய அரசு சாகர் மாலா திட்டத்தில் 200 சிறிய துறை முகங்களை மேம்படுத்த உள்ளது.அதில் புதுச்சேரியும் சேர்க்கப்பட்டு மேம்படுத்தப்படும். புதுச்சேரிக்கு நிரந்தர துணை நிலை ஆளுநர் விரைவில் நியமிக்கப்படுவார்.காங்கிரஸ் அரசுபோல் இல்லாமல் மத்திய பா.ஜ.க. அரசுக்கு புதுச்சேரி மாநிலத்துக்கு தேவையான அனைத்து வளர்ச்சித்திட்டங்கள், கோரிக்கைகளை கண்டிப்பாக நிறைவேற்றும் என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு பதவியேற்று ஓராண்டு ஆவதை முன்னிட்டு அரசின் சாதனைகள் தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியது:-

Tags:

Leave a Reply