சர்வதேச யோகாதின முன்னேற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச் சரவை கூட்டம் டில்லியில் நடைபெற்றது இதில் முக்கிய விவாதங்கள் நடத்தபட்டது.சர்வதேச யோகாதினம் ஜூன் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது.

சர்வதேச யோகா தினத்தை யொட்டி, வருகிற ஜூன் 21ந் தேதி டெல்லி ராஜ பாதையில், குழந்தைகளுடன் பிரதமர் மோடி யோகாசனம் செய்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க்நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பேசும்போது, யோகாவின் பெருமைகள் மற்றும் பயன்பற்றி குறிப்பிட்டு, சர்வதேசளவில் யோகா தினம் கொண்டாடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21–ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடபடும் என்று ஐநா.சபை டிசம்பர் மாதம் அறிவித்தது.

அந்த அறிவிப்பின்படி, முதல் சர்வதேச யோகா தினம் வருகிற ஜூன் 21ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) கொண்டாடப்படுகிறது.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, டெல்லி ராஜபாதையில் அன்று காலை 7 மணி முதல் 7.30 மணி வரை பிரமாண்ட யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில் பள்ளிக் கூட குழந்தைகள் உள்பட 16 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் கலந்துகொண்டு யோகாசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர்களுடன் சேர்ந்து யோகாசனம் செய்ய இருக்கிறார்.

அந்த சமயத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் யோகா சனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஏராளமானபேர் கலந்து கொள்ளும் மிகப் பெரிய யோகாசன நிகழ்ச்சி என்பதால், இதுபற்றி உலக சாதனைகளை தொகுத்து வழங்கும் கின்னஸ் புத்தக நிர்வாகத்துக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply