போலி கல்விசான்றிதழ் விவகாரத்தில் தில்லியின் முன்னணாள் சட்ட துறை அமைச்சர் ஜிதேந்தர்சிங் தோமர் கைது செய்யப் பட்டிருப்பதன் மூலம் ஆம் ஆத்மியின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது என்று பாஜக தெரிவித்துள்ளது.

இந்தவிவகாரம் குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித்பத்ரா கூறுகையில், பல்வேறு காரணங்களுக்கான மாற்று கட்சியினரை பதவி விலகக்கோரி வந்த ஆம் ஆத்மி , தனது கட்சியின் உறுப்பினராக தோமரை இது வரை ஏன் பதவி விலக கூறவில்லை.இந்தவிவகாரம் தொடர்பாக தோமர் பதவி விலகவேண்டும் என்று பாஜக வலியுறுத்திய போதிலும் அதை அவர்கள் ஏற்கவில்லை. தற்போது வேறுவழியில்லாமல் பதவி விலகி உள்ளார். இதன் மூலம் ஆம் ஆத்மியின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது என்றார் அவர்.

Leave a Reply