இந்தியாவுடன் இலங்கையை தரை வழியாக இணைப்பதற்காக ரூ.23 ஆயிரம்கோடியில் திட்டம் மேற்கொள்ளப்படும் என மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்.

சிங்கள தீவுக்கோர் பாலம் அமைப்போம் என்ற பாரதியாரின் கனவு இதன்மூலம் நனவாகிறது. வங்கதேசம், பூட்டான், நேபாளம் நாடுகளுடன் மோட்டார் வாகனங் களுக்கான ஒப்பந்தத்தில் இந்தியா நேற்று கையெழுத்திட்டது. அப்போது இந்தியா- இலங்கையை தரை வழியாக இணைப்பது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி விவரித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் ரூ 23 ஆயிரம் கோடி மதிப்பில் இந்தியா- இலங்கையை இணைக்கும் திட்டம் உருவாக்கப் படுகிறது. தமிழகத்தின் தனுஷ் கோடிக்கும் இலங்கை எல்லைக்கும் இடையிலான 23 கிலோ மீட்டர் தூரத்தை பாலம்வழியாக இணைப்பது அல்லது பாம்பன் நகரையும் தலை மன்னாரையும் (29 கிலோ மீட்டர்) இணைப்பது என்பது ஒரு திட்டம்.

இந்த இரண்டும் பொருந்தாத சமயத்தில் கடலின்கீழே சுரங்கப் பாதை அமைத்து இணைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. இவ்வாறு நிதின்கட்காரி கூறினார். சிங்கள தீவினிக்கோர் ஒருபாலம் அமைப்போம் என்று மகாகவி பாரதியார் கூறினார். அவருடைய கனவு நனவாகும் வகையில் இந்ததிட்டம் அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

Leave a Reply