கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இஸ்கான் இயக்கம் பகவத்கீதை போட்டி நடத்தியது. இந்த போட்டியில் மும்பையைச் சேர்ந்த மரியம் அசிப்சித்திக் என்னும் 12 வயது இஸ்லாமிய மாணவி கலந்துகொண்டு முதல் பரிசை தட்டிச்சென்றார். அந்த இஸ்லாமிய மாணவிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துதெரிவித்தார்.

இந்நிலையில், அந்த இஸ்லாமிய மாணவி தனது பெற்றோருடன் பிரதமர் மோடியை டெல்லியில் இன்று சந்தித்தார். அப்போது அந்த மாணவியை பிரமதர் மகிழ்ச்சியுடந் பாராட்டினார். மேலும், அந்த மாணவிக்கு பல்வேறு மதங்கள் குறித்த 5 புத்தகங்களை பரிசாக அளித்தார்.

அப்போது, பிரதமர் நிவாரண நிதி மற்றும் தூய்மை இந்தியா திட்டத்துக்கு தலா ரூ.11 ஆயிரம் நிதி யுதவியை மாணவி மர்யம் ஆசிப் சித்திக் வழங்கினார்.

இந்நிகழ்வின் போது, சிறுமி மரியம் அசிப்சித்திக் உடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, தனது இளம்தோழியைச் சந்தியுங்கள் என்று நரேந்திர மோடி பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply