குஜராத் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதை கட்டாய மாக்கிய விவகாரத்தில் பின் வாங்கப் போவதில்லை என மாநில முதலமைச்சர் ஆனந்திபென் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து வாக்காளர் களும் வாக்களிப்பதை கட்டாயமாக்கி அம்மாநில சட்ட பேரவை தீர்மானம் நிறைவேற்றியது. வரும் அக்டோபர் மாதம் அங்கு நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் இது அமலுக்கு வருவதாக முதல மைச்சர் ஆனந்தி பென் அறிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் விதிகளைசெய்த சட்டதிருத்தத்தை அமல்படுத்து வதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார். வாக்களிக் காதவர்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக ஆனந்திபென் கூறினார். வாக்களிக்காதவர்கள் மீது நிச்சயம் கடுமையான நடவடிக்கை இருக்காது என்று கூறுய அவர் புதியவிதிகளை அமல்படுத்திலிருந்து பின்வாங்க போவதில்லை என்றார்.

வாக்களிப்பதை கட்டாய மாக்கியதர்க்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திரமோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோதே உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பது கட்டாயமாக்க சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அப்போதிய ஆளுநர் கமலா மறுப்பு தெரிவிக்கவே அது கிடப்பில் போடபட்டது. மத்தியில் ஆட்சி மாற்றத்திற்குபின் குஜராத் ஆளுநராக நியமிக்கப்பட்ட கோலிக் சட்டத் திருத்தத்திற்க்கு ஒப்புதல் அளித்துள்ளார்..

Leave a Reply