பெண் குழந்தை களின் மகத்துவத்தை உணர்த்தும் விதமாக , தனது மகளுடன் தந்தையர் செல்ஃபி எடுத்து அனுப்ப பிரதமர் நரேந்திரமோடி விடுத்த அழைப்புக்கு ஏராளமான பதிவுகள் குவிந்ததால், இந்தியளவில் ஃபேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் டிரண்டிங்கில் முதல் இடத்தை பிடித்தது.

இதேபோல, உலக அளவிலும், இந்தபதிவுகள் டிரண்டிங்கில் 5வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வானொலியில் பொது மக்களுடன் உரையாடும் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திரமோடி, தந்தையர் அனைவரும், தங்களது மகள்களுடன் செல்ஃபி எடுத்துவெளியிட அழைப்பு விடுத்தார்.

இதற்கு ஏராளமான தந்தையர்கள் தங்களது மகள்களுடன் செல்ஃபி எடுத்து புகைப் படங்களை பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல், தனது மகள் தான் தங்களது உலகம் என்பதை பறைசாற்றும் விதமாக ஒவ்வொரு மறக்க முடியாத தருணத்தையும், அதற்கான புகைப் படங்களையும் இணைத்து வெளியிட்டனர்.

இதனால், நேற்று உலகளவில் மகளுடன் செல்ஃபி பதிவு டிரண்டிங்கில் டாப் 5 இடத்தை பிடித்துள்ளது. இந்திய அளவில் டிரண்டிங்கில் முதல் இடத்தை பிடித்தது.

Leave a Reply