ஐஏஎஸ், ஐபிஎஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகை பணிகளுக்கான தேர்வுமுடிவுகள் இன்று மதியம் வெளியிடப்பட்டது. இதில் முதல் ஐந்து இடங்களில் 4 இடங்களை பெண்கள் கைப்பற்றினர். முதல்ரேங்கை இரா சிங்கால், 2-வது ரேங்க் ரேணுராஜ், 3-வது ரேங்க் நிதிகுப்தா, 4-வது ரேங்க் வந்தனாராவ் ஆகிய பெண்களே பிடித்து சாதனை படைத்துள்ளனர். தமிழக மாணவி சாரு ஸ்ரீ க்கு 6-வது இடம் கிடைத்துள்ளது. சுகர்சா பகத் என்பவர் 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் கூறியதாவது:

நாட்டிற்கு சேவைசெய்யும் பயணத்தை தொடங்கியுள்ள உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். யுபிஎஸ்சி. தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு இது போன்ற தருணங்கள் வாழ்க்கையின் ஒருபகுதிதான். அவர்கள் தங்கள் எதிர் கால முயற்சிகளில் இருந்து பின்வாங்கக் கூடாது. அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Leave a Reply