தேசிய நெடுஞ் சாலைகளில் தனியார் வாகனங்கள் மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியத்தை தவிர்க்கும்விதமாக, ஆண்டுபாஸ் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தீவிரமாக ஆலோசனை நடத்திவருகிறது.

இந்த திட்டத்தின்படி, ஆண்டுக்கு தனியார் வாகனங்கள் ₹2,500 முதல் ₹3,000 செலுத்தி பாஸ் பெற்றுக் கொண்டாலே எவ்விதமான காத்திருப்பும் இல்லாமல் தேசியநெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் பயணிக்கலாம். இதற்காக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வரைவுதிட்ட அறிக்கையை தயாரித்து , அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளது. இந்ததிட்டத்துக்கு 'ஷேடோ டோலிங்' என அரசு பெயரிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி பகுதியில் பயணிக்க தற்போது தனியார் வாகனங்களான கார், வேன், கனரக வாகனங்கள் ஆகியவைகளுக்கு மாத பாஸ் மட்டுமே வழங்கப்பட்டுவருகிறது. இந்த புதியதிட்டத்துக்கு முறையான ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் தனியார் வாகனங்களுக்கு ஆண்டு பாஸ் ட்டம் நடைமுறைக்கு வரும். மேலும், இந்த திட்டத்தில் சேர்ந்து 'பாஸ்ட் டேக்' எனும் தொழில் நுட்பத்தை பதிவுசெய்யும் தனியார் வாகனங்களுக்கு கட்டணத்தில் மானியமாக தள்ளுபடி வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பத்தை பொருந்தி இருக்கும் தனியார் வாகனங்கள் சுங்கச்சாவடியைக் கடக்கும் போது அது, மின்னணு முறையில் இயல்பாகவே பதிவாகிவிடும். இதனால், நாளொன்றுக்கு பாஸ்ட் டேக் பொருத்திய தனியார் வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து சென்ற எண்ணிக்கையை துல்லியமாக அளவிடமுடியும். குறிப்பாக இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் தனியார் வாகனங்களுக்கு மட்டுமே தள்ளுபடி வழங்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply