பொருளாதார, ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு அறிக்கை, பொருளாதார வளர்ச்சியும் சீர்திருத்தங்களும், ஏழைமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்ற செய்தியை உணர்த்துகிறது. நாட்டில் வறுமையை ஒழிக்க, எட்டு முதல் 10 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்பட வேண்டும்.

ஏழை மக்களுக்கு நிரந்தரமான, நல்லசம்பளம் கிடைக்கக் கூடிய, முறைசார் வேலைகள் கிடைக்க, அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசுக்கு கிடைத்துள்ள சமீபத்திய தகவல்கள், பொருளாதார சுழற்சி சாதகமாக மாறி வருவதையும், நின்றுபோன திட்டங்கள் வேகமெடுப்பதையும் உணர்த்துகின்றன. ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் சீர்திருத்தங்கள் போன்றவற்றால், நாட்டில் முதலீடுகளை அதிகரிக்க செய்யலாம்.

ஏழைகளுக்கு மானியங்கள் அளித்து, அரசு உதவிவருகிறது. ஆனால், மானியங்கள் சரியான வகையில், ஏழைகளை சென்றடைவது இல்லை . ஜன்தன், ஆதார், மொபைல்போன் போன்றவற்றின் மூலம், ஏழைகளுக்கு உதவித் தொகைகள் கிடைப்பதை உறுதி செய்யலாம்.

சமையல் 'காஸ்' சிலிண்டர் மானியம், வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில், நேரடி பணப் பட்டுவாடா செய்யப்படுவதால், அரசுக்கு, 12,700 கோடி ரூபாய் மிச்சமாகிறது. இத்திட்டத்தை, பிற மானியங்களுக்கும் பின்பற்றலாம். என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது கட்டுரையில் கூறியுள்ளார்.

Leave a Reply