தமிழகத்தில் ரூ.2,838 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை பணிகளுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இன்று அடிக்கல் நாட்டினார். கன்னியா குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் புதியபாலம் கட்டுவது உள்ளிட்ட ரூ.2,838 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று (வெள்ளிக்கிழமை) நடந்தது.

இதற்காக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தமிழகம் வந்துள்ளார். காலை 11 மணியளவில் நாகர்கோவில் நான்கு வழிச்சாலைக்கான அடிக்கல் நாட்டுவிழா அவரது தலைமையில் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து கார் மூலம் மதுரை புறப்பட்டு சென்றார் நிதின்கட்காரி. அங்கு விரகனுார் ரிங்ரோட்டில் ராமேஸ்வரம் நான்கு வழிச் சாலைக்கான அடிக்கல் நாட்டினார். இந்த விழாக்களில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Leave a Reply