பிரதமராக நரேந்திரமோடி பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக அடுத்தமாதம் (ஆகஸ்டு) 7–ந் தேதி தமிழகம் வருகிறார். இது பற்றி தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியதாவது:–

தேசிய கைத்தறி நாள்விழா அடுத்த மாதம் 7–ந் தேதி நடக்கிறது. இந்த விழாவை மத்திய அரசு சென்னையில் நடத்துகிறது.

சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் தென் மாநிலங்களை சேர்ந்த 3 ஆயிரம் நெசவாளர்கள் பங்கேற்கிறார்கள்.

விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். நெசவாளர்கள் நிறைந்த நமதுமாநிலத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்தி பெருமைசேர்க்கிறார்கள். தமிழகத்தில் இருந்து 1000 நெசவாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.

விழாவில் சாதனைபடைத்த நெசவாளர்களுக்கு பிரதமர் மோடி விருதுவழங்கி கவுரவிக்கிறார். முழுக்க முழுக்க அரசு விழாவில் கலந்துகொண்டாலும் முதல் முறையாக சென்னைவரும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் பா.ஜ.க சார்பில் உற்சாகவரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்துவருகிறோம்.

6–ந் தேதி தேசிய தலைவர் அமித்ஷா மதுரைவருகிறார். அங்கு நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

பா.ஜ.க தலைவர் அமித்ஷாவும், பிரதமர் மோடியும் தமிழகம் வருவதால் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர் இவ்வாறு அவர் கூறினார். 

Tags:

Leave a Reply