நெடுஞ்சாலைகளில் மரம் நடுகின்ற புதிய திட்டத்தினால் ஐந்து லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "வாகனங்களின் முகப்புவிளக்கு ஒளி எதிரேவரும் வாகனங்களின் ஓட்டுனர் கண்களை கூசவைப்பதால் தான் பெரும்பாலான விபத்துகள் நேரிடுகின்றன. அதை தவிர்க்க புதியதொழில்நுட்பம் பின்பற்றப்படும். சாலையின் இருபுறமும் மரங்கள் நடுவது இப்போதைய 97 ஆயிரம் கிலோமீட்டர் நெடுஞ்சாலையிலும், புதிதாக அமைக்கப்பட உள்ள 40 ஆயிரம் கிலோ மீட்டர் சாலையிலும் மேற்கொள்ளப்படும்.

இந்த புதியதிட்டத்தால் ஐந்து லட்சம் பேருக்கு கூடுதலாக வேலைகிடைக்கும்.அந்தந்த பகுதி மண்வளத்திற்கு ஏற்ப மரங்கள் வளர்க்கபடும். மகாராஷ்டிராவின் கொங்கண் பகுதியில் மா மரங்களும், சத்தீஸ்கரில் புளிய மரங்களும் வளர்க்கப்படும். இடையிடையே மலர், பழச்செடிகளும் வளர்க்கப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply