நட்சத்திர நாயகன் கலாமின் உடல் மக்கள்வெள்ளத்தில் தாய் மண் பேய்க்கரும்பு என்ற பகுதியில் இஸ்லாமிய வழக்கப்படி இறுதிமரியாதை செய்யப்பட்டு, முழு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழக்கத்துடன் நல்லடக்கம் செய்யபட்டது.

நல்லடக்க நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி, மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, ஆளுநர் சதாசிவம், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ஆந்திர முதல் சந்திர பாபு நாயுடு உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள், விஞ்ஞானிகள் கலந்துகொண்டனர். பல்வேறு நாட்டின் தூதர்கள் கலந்து கொண்டனர்.

கலாமின் உடலுக்கு வழிநெடுகிலும் சாலையின் இரு பக்கங்களிலும் மக்கள் கண்ணீர்மல்க தங்களது இறுதி அஞ்சலி செலுத்தினர்.

நாட்டை ரசித்த நட்சத்திர நாயகனின் உடல் தாய் மண் பேய்க்கரும்பு என்ற இடத்தில் விதைக்கப்பட்டிருக்கிறது. இந்த விதை விருச்சமாக விரைந் தெழுந்து தொடர்ந்து மாணவர்களின் இளைஞர்களின் எழுச்சிக்கு வித்திடும் என்பது திண்ணம்.

Leave a Reply