பீகாரில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தில் பயங்கர வெடி பொருட்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகாரில் சட்டசபைத் தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திரமோடி கடந்த சில தினங்களுக்கு முன் பா.ஜ.க பிரச்சாரத்தை தொடங்கிவைத்தார். அடுத்து அவர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக் கூட்டம் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி கயாவில் நடைபெற உளள்து. இதனை முன்னிட்டு போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் தீவிர கண் காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று அங்குள்ள சரத்பூர் கிராமத்தை யொட்டியுள்ள காட்டுப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைத்து வைக்கப் பட்டிருந்த சக்தி வாய்ந்த ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள், மற்றும் மூன்று பெரியசிலிண்டர் வெடிகுண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கண்ட வெடி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் இந்த வெடி பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் பொதுக் கூட்டத்தின்போது இந்த வெடி பொருட்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த மாவோயிஸ்ட்கள் திட்டமிட்டிருக்கலாம் என்று தெரிகிறது. பீகாரிலேயே கயாவில்தான் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply