தில்லியில் உள்ள ஒளரங்கசீப் சாலைக்கு, மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் பெயரைச் சூட்டவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கிழக்கு தில்லி மக்களவை தொகுதி பாஜக உறுப்பினர் மகேஷ்கிரி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக மகேஷ் கிரி வெள்ளிக் கிழமை எழுதியுள்ள கடிதத்தில், "முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் சிறந்த விஞ்ஞானியாகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும் விளங்கி நாட்டில் உள்ள இளைஞர்களை மிகவும்கவர்ந்தார் கலாம்.

தனதுவாழ்க்கை முழுவதையும் தாய் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதற்கு மரியாதைசெய்யும் வகையில் தில்லியில் உள்ள "ஒüரங்கசீப் சாலை', "டாக்டர் ஏபிஜெ. அப்துல் கலாம்' என பெயர் மாற்றப்பட வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

Tags:

Leave a Reply