தூக்கிலிடப்பட்ட, மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப்மேமனின் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று திரிபுரா ஆளுநர் ததகட்டா ராய் தெரிவித்துள்ளார்.

யாகூப் மேமனின் இறுதிச்சடங்கில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இது தொடர்பாக தனது ட்விட்டர் தளத்தில் "இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்கள் அனைவர் மீதும் (உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் தவிர) உளவுத்துறையினர் கண்காணிப்பைத் தொடரவேண்டும். அவர்களில் பலர் தீவிரவாதிகளாக இருக்கலாம்.

"மாநிலத்தின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட வேண்டியது ஆளுநரின்பொறுப்பு. தீவிரவாதத்தை தடுக்க யாகூப்பின் ஊர்வலத்தில் பங்கேற்றவர்களை உளவுத்துறை கண்காணிக்க வேண்டும். வருமுன் காப்பதே சிறந்தது"

இருப்பினும் நான் எந்தவொரு சமூகத்தையும் குறிப்பிடவில்லை. "ஆளுநராக எனது பணி, சமரசம்செய்து கொள்வதல்ல. நான் சொல்லாத கருத்தையும், குறிப்பிட்ட சமூகத்தை தாக்குவதாக சிலர் கண்டுபிடித்துச் சொல்கின்றனர். பொதுநல விவகாரத்தை, பொது மக்களின் கவனத்துக்குக் கொண்டுவருவது எனது பணி" .

Leave a Reply