மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கிலிடப்பட்ட யாகூப்மேமனின் மனைவியை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வுசெய்ய வேண்டும் எனக் கோரி சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவுக்கு, கடிதம் எழுதிய அக்கட்சியின் மகாராஷ்ட்ர பிரிவின் துணைத்தலைவர் முகமது ஃபரூக் கோஷி தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக அவர் தற்காலிக நீக்கம் செய்யப் பட்டுள்ளதாக சமாஜ்வாதி கட்சியின் மகாராஷ்ட்ர பிரிவு தலைவர் அபு ஆஸ்மி தெரிவித்துள்ளார். ஊடகங்களில் செய்திவெளியிடும் முன், கட்சித் தலைவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்ற விதியை முகமது ஃபரூக் பின்பற்றவில்லை என அபு ஆஸ்மி கூறியுள்ளார். அதே நேரத்தில், தனது கருத்தில் உறுதியாக உள்ளதாக முகமது ஃபரூக் கோஷி குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, யாகூப்மேமனின் மனைவி ரஹீன் ஆதரவற்றவராக உள்ளதாகவும், எனவே, அவரை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வுசெய்து, அதன் மூலம், தன்னை போன்ற வலிமையற்றவர்களுக்கு குரல்கொடுக்கச் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து முலாயம் சிங் யாதவிற்கு, முகமது ஃபரூக் கோஷி கடிதம் எழுதியிருந்தார். இதற்கு காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

Tags:

Leave a Reply