'வியாபம்' ஊழல் பற்றி தெரியவந்ததும், இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்ய ஆணையிட்ட முதல் நபரே நான்தான். பின்னர் இந்தவழக்கில் ஏற்பட்ட சிக்கல்களை தீர்ப்பதற்காக நாங்கள் சிறப்பு அதிரடிப் படையை அமைத்தோம். அந்தபடையும் ஐகோர்ட்டு அமைத்த சிறப்பு புலனாய்வுக்குழுவின் கீழ் செயலாற்றிவருகிறது.

வியாபம் மூலம் நிரப்பப்பட்ட லட்சக் கணக்கான வேலை வாய்ப்புகளில் சில நூறு பணியிடங்களில் மோசடிகள் நடந்திருப்பது குறித்து 2 ஆண்டுகளுக்கு முன் மாநில சட்ட மன்றத்தில் நான் அறிவித்தேன். அந்த முறைகேடுகள் அனைத்தும் விசாரிக்கப்பட்டு உள்ளன.

இந்த ஊழலில் தவறிழைத்தவர்கள் யாரையும் நாங்கள் தப்ப விட மாட்டோம். அது எவ்வளவு செல்வாக்குள்ள நபராக இருந்தாலும்சரி. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளவர்களில் அரசியல்வாதிகள், கட்சி தொண்டர்கள், சிறிய மற்றும் பெரியளவிலான அதிகாரிகள்கூட அடங்குவர். எனவே இந்த ஊழலை நாங்கள் மறைக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.

வியாபம் விசாரணையை தொடங்கி வைத்ததே நான் தான். அதன்படி இந்த விசாரணை வெளிப்படையாக நடந்துவருகிறது. எனவே முதல்-மந்திரி பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்யும்பேச்சுக்கே இடமில்லை.

இந்தவழக்கை தற்போது சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. நாங்களும், நாட்டுமக்கள் அனைவரும் சி.பி.ஐ. மீது நம்பிக்கை வைத்துள்ளோம். எனவே விசாரணை முடியும்வரை மக்கள் காத்திருக்க வேண்டும்.என்று சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.

Leave a Reply