குருதாஸ்பூரில் தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்பதற்கு வலுவான ஆதாரம் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் எல்லையை ஒட்டி உள்ள பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் கடந்த மாதம் 27ம் தேதி 3 தீவிரவாதிகள் ராணுவ உடையில்

ஊடுருவி பயங்கர தாக்குதல் நடத்தினர். பஞ்சாப் போலீசாரும் பாதுகாப்பு படையினரும் 12 மணி நேரம் போராடி தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தில், 3 பொதுமக்கள், ஒரு எஸ்பி மற்றும் 3 போலீசார் பலியாயினர். 17 பேர் படுகாயமடைந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் கிளப்பிய இச்சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து எல்லையோரம் அமைந்துள்ள தாஷ் பகுதி வழியாக குருதாஸ்பூரில் ஊடுருவியதாகவும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 2 ஜிபிஎஸ் கருவிகளை ஆய்வு செய்ததில் தெரிய வந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், 'எந்த ஆதாரமும் இல்லாமல் பழிபோடுவது ஆரோக்கியமான போக்கல்ல' என கூறியது. இந்நிலையில், கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளின் உடலை பிரேத பரிசோதனை செய்கையில், ஒரு தீவிரவாதி அணிந்திருந்த கையுறை 'மேட் இன் பாகிஸ்தான்' அதாவது பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட கையுறை என அதில் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும், அவர்களிடமிருந்து இரவில் பார்க்கக்கூடிய கருவிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை அமெரிக்க அரசுக்கு சொந்தமானவை. இத்தகயை கருவிகளை ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையில் உள்ள அமெரிக்க வீரர்கள் பயன்படுத்துபவை.இதன் மூலம் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

Tags:

Leave a Reply