எனது கணவருக்கு என்னுடைய பாதுகாப்புகுறித்து எல்லாம் கவலையில்லை, அழகான பெண்கள் மீதுதான் கவலை என்று சோம்நாத் பார்தியின் மனைவி லிபிகா கடுமையாக தாக்கி உள்ளார்.

டெல்லி சட்டசபையில் விசாரணை கமிஷன்அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்திய போது கருத்து தெரிவித்த முன்னாள் மாநில சட்ட மந்திரியான சோம்நாத்பார்தி "டெல்லி அரசுக்கு முழுசுதந்திரம் கொடுத்தால்(பாதுகாப்பு விவகாரம்), அழகான பெண்கள் நள்ளிரவும் பயம் இல்லாமல் வெளியேசெல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நாங்கள் டெல்லியில் முழுபாதுகாப்பு வழங்குவோம்," என்று கூறியது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக அவருடைய மனைவி லிபிகா பேசுகையில், நானும் சராசரி அழகுகொண்ட பெண்தான், எனவேதான் என்னையும் அப்படி நடத்தினார் என்று நினைக்கிறேன். எனது கணவருக்கு என்னுடைய பாதுகாப்புகுறித்து எல்லாம் கவலையில்லை என்பதை தெளிவுபடுத்தி விட்டார். அவருடைய கவலையெல்லாம் அழகான பெண்கள் மீதுதான் உள்ளது. என்று விமர்சித்து உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செய்திதொடர்பாளர் சார்மிஸ்தா முகர்ஜி பேசுகையில், இது பெண்களைநோக்கிய முற்றிலும் வெறுக்கத்தக்க மற்றும் தரக் குறைவான கருத்தாகும், அவரிடம் இருந்து இது போன்ற கருத்து வந்ததில் எங்களுக்கு எந்த ஒரு ஆச்சரியமும் கிடையாது. இது முற்றிலும் அவருடைய நடவடிக்கையே காட்டுகிறது. என்று கூறி உள்ளார்.

டெல்லி சட்டசபையில் எதிர்க் கட்சி தலைவராக உள்ள பாஜக தலைவர் விஜேந்திர குப்தா பேசுகையில், "இது மிகவும் கண்டிக்கத் தக்க கருத்து ஆகும்," என்று கூறியுள்ளார். "இந்த கருத்தானது, அவர் பெண்களை பற்றி என்ன நினைக் கிறாரோ அதனை காட்டுகிறது. இது மிகவும் கண்டிக்கதக்க கருத்தாகும். பெண்களை பற்றி இது போன்ற வார்த்தையை பயன்படுத்திய சோம்நாத் பார்தியை அங்கிருந்த முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தடுத்து நிறுத்த வில்லை," என்று பாரதீய ஜனதா தெரிவித்துள்ளது.

Leave a Reply