நிலம் கையக மசோதாவில் பாஜக அரசு கொண்டுவந்த 6 முக்கிய திருத்தங்களை திரும்பப்பெற நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் தந்துள்ளது.

குறிப்பாக நிலம கையகப்படுத்த விவசாயிகள் ஒப்புதல்தேவை என்ற பிரிவுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்துவதற்கு விவசாயிகளின் ஒப்புதல்தேவை என்ற பிரிவும், நிலம் கையகப்படுத்துவதால் ஏற்படும் சமூக தாக்க மதீப்பீடு ஆகியவை மீண்டும் மசோதாவில் இடம் பெறுகிறது.

நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் 11 பாஜக உறுப்பினர்களும், விவசாயிகள் ஒப்புதல் மற்றும் சமூகத்தாக்க மதிப்பீடு ஆகிய திருத்தங்களை மீண்டும்சேர்க்க ஒப்புதல் தெரிவித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நிலம் கையகப்படுத்த மசோதா திருத்தங்களை கைவிடுவதை தொடர்ந்து அலுவாலியா தலைமை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆகஸ்ட் 7-ம் தேதி கருத்தொருமித்தல் அறிக்கையை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply