பல ஆண்டுகளாக பிரிவினை வாதத்தை கையில் எடுத்து போராட்டம் நடத்திவந்த நாகாலாந்து மாநில தீவிரவாத பிரச்னைக்கு பிரதமர் தீர்வுகண்டுள்ளதை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக முன்னாள் பிரதமரும், மஜத தேசிய தலைவருமான எச்.டி.தேவகவுடா கூறினார்.

இதுகுறித்து பெங்களூருவில் நேற்று அவர் கூறுகையில், இந்தியாவின் வட கிழக்கு பகுதியில் உள்ள நாகாலாந்து மாநிலத்தில் பல ஆண்டுகளாக பிரிவினை வாதம் வலியுறுத்தி போராட்டம் நடத்திவருகிறார்கள். நான் பிரதமராக இருந்த போது நாகா பிரச்னைக்கு தீர்வுகாண முயற்சி மேற்கொண்டேன். தற்போது 25 ஆண்டுகளுக்கு பின் நாகா தீவிரவாத அமைப்புகளுடன் பிரதமர் மோடி சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வெற்றிகண்டுள்ளார். மோடியின் இந்த முயற்சியை நான் மனதார பாராட்டுகிறேன். நாகாபிரச்னை மட்டுமில்லாமல், நாட்டில் பிற மாநிலங்களில் தலைதூக்கியுள்ள பிரிவினைவாத பிரச்னைக்கும் தீர்வுகாண வேண்டும்' என்றார்.

அரசின் 'பெரிய சாதனை': அமித்ஷா பெருமிதம்

சுமார் 50 ஆண்டுக ளுக்கும் மேலாக நீடித்துவந்த பிரச்னைக்கு சுமூகத்தீர்வு காணும் வகையில் நாகா அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளது பிரதமர் மோடி தலைமையிலான அரசின் மிகப்பெரிய சாதனை என்று பா.ஜ. பாராட்டு தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் சிந்தனையான 'ஒரே இந்தியா, சிறந்த இந்தியா' என்பதற்கு வலு சேர்க்கும் வகையில் இந்த அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடகிழக்கு பிராந்தியம் வளர்ச்சிபெற வேண்டும் என்பதுதான் கட்சியின் நோக்கம் மற்றும் பிரதான முன்னுரிமை. மோடி தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணி அரசின் பெரியசாதனை இது என்று பா.ஜ. கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா குறிப்பிட்டார். –

Tags:

Leave a Reply