அமெரிக்க வெளியுறவுத்துறை (தெற்கு, மத்திய ஆசியாவுக்கான) துணை அமைச்சர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான நிஷாதேசாய் பிஸ்வால். இவர் நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்டார்.

அப்போது பேசியவர், வரும் செப்டம்பர் மாதம் வாஷிங்டனில் தொடங்க உள்ள அமெரிக்க-இந்திய போர்த் திறன் மற்றும் வர்த்தக பேச்சு வார்த்தையில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திரமோடி வர உள்ளார்.

இது அவரது 2வது முறையான அமெரிக்க பயணம். இந்த சந்திப்பில் நியூயார்க் மற்றும் கலிபோர்னியா மாகாணங்களுக்கும் மோடி வர உள்ளார். மோடியின் வருகையால் கலி போர்னியா மாகாணத்துக்கு ஏராளமான தொழில்வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால், அவரது வருகையை மிகவும் ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.

Leave a Reply