மதுரையில் நடைபெறும் தலித் இயக்கமாநாட்டில் பங்கேற்க சென்னை வந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா விற்கு அக்கட்சியின் தமிழக தலைவர்கள் விமான நிலையத்தில் உற்சாகவரவேற்பு அளித்தனர்.

மதுரையில் தேவேந்திர குல வேளாளர் அறக் கட்டளையும், சுதேசி இயக்கமும் இணைந்து நடத்தும் மாநாட்டில் சிறப்புவிருந்தினராக பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க டெல்லியில் இருந்து விமானம்மூலம் சென்னைக்கு வந்தார் அமித்ஷா.

அவருக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் உற்சாகவரவேற்பு கொடுத்தனர். சென்னையிலிருந்து விமானம் மூலம் காலையில் மதுரைக்கு கிளம்பினார்.

அழகர்கோயில் சாலையில் உள்ள அரசுவிருந்தினர் மாளிகையில் தங்கும் அமித்ஷா இன்று மாலையில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு சென்று வழிபடுகிறார். அதன் பின்னர் அவர் ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெறும் தேவேந்திர குல வேளாளர் அறக் கட்டளையின் மாநில பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி மற்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் தமிழிசை செüந்திர ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அமித்ஷா வருகையை முன்னிட்டு மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply