தமிழகத்தில் ஊழல் மலிந்துள்ளதால் வளர்ச்சியை பெறமுடியவில்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மதுரையில் தேவேந்திரர் தன்னார்வ அறக் கட்டளையும், சுதேசி இயக்கமும் இணைந்து நடத்தும் பிரதிநிதிகள் மாநாடு ராஜாமுத்தையா மன்றத்தில் நடைபெற்றது. இதில் சிறப்புவிருந்தினராக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்துகொண்டார்.

தமிழகத்தில் ஊழல் ஒழிந்தால் வளர்ச்சி யடைந்த முதல் மாநிலமாக தமிழகம் இருக்கும். நான் இங்கு அரசியல்பேச விரும்பவில்லை. வளர்ச்சியும் ஊழலும் ஒன்றாக இருக்கமுடியாது. நான் இரண்டாவது முறையாக மதுரைக்கு வந்துள்ளேன். தமிழகத்தை ஊழல் இல்லாத மாநிலமாக மாறவேண்டும். தமிழக முன்னோர்களின் செல்வத்தின் அடையாளமாக மீனாட்சி அம்மன் கோவி்ல் உள்ளது.

தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் இருந்தாலும், ஊழல்மிகுந்த மாநிலங்களின் பட்டியலில் இருப்பதால் வளர்ச்சியை எட்டமுடியவில்லை என அவர் தெரிவித்தார்.

Leave a Reply