லலித் மோடியின் மனைவிக்கு புற்று நோய் உள்ளது. அவர் போர்ச் சுக்கலில் சிகிச்சை பெறவே நான் உதவினேன். என் இடத்தில் சோனியா இருந்தால், ஒருபெண் நோயாளி சாகட்டும் என்று விட்டுவிடுவாரா? மனித நேயத்துடனேயே நான் அவருக்கு உதவினேன் என்று மத்திய அமைச்சர் சுஷ்மாசுவராஜ் விளக்கம் அளித்தார்.

லலித் மோடிக்கு விசா பெற உதவியதாக தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகுறித்து நண்பகல் 12.13 மணியளவில் விளக்கம் அளித்த சுஷ்மா சுவராஜ், , லலித்மோடிக்கு விசா வழங்குமாறு தான் எப்போதுமே பிரிட்டிஷ் அரசை வலியுறுத்த வில்லை . துரதிருஷ்டவசமாக, லலித் மோடிக்கு உதவியதாக என் மீது குற்றம்சாட்டப் பட்டுள்ளது. இது எனது மிக மோசமான நாட்கள். இதோடு இந்த பிரச்னை முடிந்துவிடும் என்று நம்புகிறேன்.

நான் பிரட்டிஷ் அரசை வலியுறுத்தி யிருந்தால், பேட்டி ஒன்றில், அவர்களே அதனை கூறியிருப்பார்கள். ஆனால், நான் அதை செய்யவில்லை என்றுதான் அவர்கள் கூறினார்கள். லலித்மோடி விசா பெற நான் எப்போதுமே பரிந்துரைக்கவில்லை.

இந்த சம்பவத்தில் எனக்கு அநீதி இழைக்கபட்டுள்ளது. எனது தரப்பு நியாயங்களை எடுத்துரைக்க கூட எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட வில்லை.

லலித் மோடியின் மனைவிக்கு புற்று நோய் உள்ளது. அவர் போர்ச்சுக்கலில் சிகிச்சை பெறவே நான் உதவினேன். என் இடத்தில் சோனியா இருந்தால், ஒருபெண் நோயாளி சாகட்டும் என்று விட்டுவிடுவாரா? மனித நேயத்துடனேயே நான் அவருக்கு உதவினேன்.

நான்அவருக்கு உதவியது குற்றம் என்றால், அந்தகுற்றத்துக்கு எந்த தண்டனையை இந்தஅவை அளித்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள நான் தயாராகவே உள்ளேன் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply