சென்னை வந்த பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள் உற்சாகவரவேற்பு அளித்தனர்.சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த கைத்தறி தினவிழா மற்றும் நெசவாளர்களுக்கு விருதுவழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னைவந்தார்.

விழா நடந்த சென்னை பல்கலைக் கழகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிரதமர் நரேந்திரமோடி காரில் அழைத்து வரப்பட்டார். விமான நிலையத்தில் இருந்து சென்னை பல்கலைக் கழகம் வரை பாரதீய ஜனதா கட்சியினர் கட்சி கொடியுடன் நின்று பிரதமரை உற்சாகமாக வரவேற்றனர்.

Tags:

Leave a Reply