" நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை. எனவே, அரசாங்கம் எந்த சலுகையும், ஒதுக்கீடும் அளிக்கவேண்டாம்" என மதுரையில் நடந்த தேவேந்திரர் தன்னார்வ அமைப்பின் மாநாட்டில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

தேவேந்திரர் தன்னார்வ அமைப்பின் சார்பில் கடந்த 15ம் தேதி மாநாடு நடத்தப் படுவதாக இருந்தது. அப்போது அமித்ஷா வரமுடியாததால் தள்ளிவைக்கபட்டு, மாநாடு 6ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று நடந்த நிகழ்ச்சிக்கு அமித் ஷா வருகை தந்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் பாடாமல் ஆண்டாள் பாசுரம் பாடினார்கள். இந்தமாநாட்டை நடத்திய தேவேந்திரர் தன்னார்வ அறக் கட்டளையின் தலைவர் தங்கராஜ் பேசும் போது, ''தமிழகத்தில் ஒருகோடி தேவேந்திரர்கள் வாழ்கிறார்கள். தேவேந்திரனை தெய்வமாக வணங்கும் எங்கள் சமூகம் பசுவை தெய்வமாக வணங்கியும், மாட்டி றைச்சி சாப்பிடாத வர்களாகவும், கோயில் திருப்பணிகள் செய்தும், விவசாயத் தொழில் செய்தும், நாட்டை ஆண்டும் உள்ளோம். மீனாட்சியம்மன் கோயிலை கட்டியவர்கள் நாங்கள்.

இவ்வளவு பாரம்பரியம் நிறைந்த எங்கள் சமூகத்தை 1935ல் பிரிட்டிஷ் அரசு பட்டியல் இனமென்று அறிவித்தது. எங்கள்பாரம்பரிய பெருமையை சொல்ல யாருமில்லை. எங்களை தீண்டத் தகதவர்களாக தமிழகத்தை ஆண்ட அரசியல் கட்சிகளும், பத்திரிகைகளும், அறிவுஜீவிகளும் குறிப்பிட்டு வந்தார்கள். எஸ்.சி. என்றும், தலித் என்றும் இழிவுபடுத் தினார்கள். எங்கள் சமூகத்துக்கு ஏற்பட்ட இழிவை நீக்கவந்தவர் அமித்ஷா. எங்கள் சமுகத்தை சேர்ந்தவர் அவர். அவர்தான் மத்திய பிரதேசத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, தேவேந்திர சமுதாயம் பசுவை வணங்க கூடியவர்கள். மாட்டிறைச்சி உண்ணாதவர்கள் என்றார். அதைக்கேட்ட பின்புதான் எங்கள் சமுதாயத்தின் மதிப்பு உயர்ந்தது. அதனால்தான் எங்கள் சமூக காவலன் அவர் தலைமையில் நாங்கள் தாழ்ந்தவர்கள் அல்ல, பாரம்பரியமிக்க சாதியை சேர்ந்தவர்கள் என்ற பிரகடனத்தை இங்கு வெளியிடுகிறோம்.

Tags:

Leave a Reply