பிரதமர் நரேந்திரமோடி – ஜெயலலிதா இடையேயான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு சென்னையில் ஞாயிற்றுக் கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்று தி.மு.க எம்.பி. கனிமொழி கூறுகிறார். தீவிரவாதி களிடமும், பாலியல்பலாத்கார குற்றவாளிகளிடமும் கருணையை எதிர்பார்க்க முடியாது. அதுபோன்ற குற்றங்களுக்கு கடும்தண்டனை தேவை.

பிரதமர் மோடி – முதல்வர் ஜெயலலிதா சந்திப்பை காங்கிரஸ் விமர்சனம்செய்கிறது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு.

ஜெயலலிதாவை மோடி பார்ப்பதற்காகத் தான் வந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். ஆனால், தேசியகைத்தறி தினத்தில் பங்கேற்கவே வந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

தேசிய அளவில் மதுவிலக்கு என்பது ஒரேநாளில் சாத்தியமில்லை. ஒவ்வொரு மாநிலமாக மது விலக்கை அமல்படுத்த வேண்டும்" என்றார் வெங்கய்ய நாயுடு.

Leave a Reply