அரசு செலவினங்கள் கட்டுக்குள் கொண்டு வரப்படா விட்டால் கிரீஸ் போன்று கடும்பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விடும் என மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி எச்சரித்துள்ளார்.

செலவுகணக்கு சேவை தினவிழா டெல்லியில் நடைபெற்றது. இந்தவிழாவில் கலந்து கொண்டு பேசிய நிதியமைச்சர் திரு.அருண்ஜேட்லி, எந்த ஒரு அரசும் தனது சக்திக்கு உட்பட்டவகையில் செலவினங்களை வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

அதிகவருவாய் குறைவான செலவு என்கிற கொள்கையே நிதிப்பற்றாக்குறை கட்டுப்படுத்த சிறந்த வழி எனவே அரசின் செலவினங்களை கட்டுக்குள் வைத்திருக்குமாறு அனைத்துத்துறை அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply