நாடாளு மன்றத்தை முடக்கும் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சமாஜ வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் கருத்து தெரிவித்துள்ளதை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.

சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரா ராஜே, சிவராஜ்சிங் செüஹான் ஆகியோர் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற அலுவல்களை முடக்கிவருகின்றன. மக்களவையில் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் 25 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டபோது, சமாஜ வாதி எம்.பி.க்கள் காங்கிரஸýக்கு ஆதரவாகக் குரல்கொடுத்து அவையைப் புறக்கணித்தனர்.

காங்கிரஸின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்து வந்த முலாயம்சிங் யாதவ், திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.

இது தொடர்பாக திங்கள்கிழமை கருத்து வெளியிட்ட அவர், நாடாளுமன்றத்தை தொடர்ந்துமுடக்கும் நடவடிக்கைகளில் காங்கிரஸýக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.

முலாயமின் இந்த கருத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். பாஜக எம்.பி.க்கள் கூட்டம் தில்லியில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளை மோடி கடுமையாக விமர்சித்ததாகத் தெரிகிறது. கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் ராஜீவ்பிரதாப் ரூடி, இதுதொடர்பாக கூறியதாவது:

நாடாளு மன்றத்தை முடக்கும் முயற்சியில் சிலர் (காங்கிரஸ்) ஈடுபட்டு வருவதாகவும், நாட்டின் வளர்ச்சியை அவர்கள் தடுப்பதாகவும் பிரதமர் குற்றம் சாட்டினார். குறிப்பாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே அவர்களின் இலக்கு என்று குறிப்பிட்டார். நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான அவர்களது திட்டத்தை பல எதிர்க் கட்சிகள் புரிந்து கொண்டு விட்டனர் எனவும், குறிப்பாக நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு எதிராக முலாயம்சிங் யாதவ் தெரிவித்த கருத்தை வரவேற்பதாகவும் பிரதமர் கூறினார்.

Leave a Reply