லோக் சபாவில் இன்று காங்கிரஸைக் குறிவைத்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடுமையாக வாதம் புரிந்ததை பார்த்து , மூத்த பாஜக தலைவர் அத்வானி கண்கள் கலங்க சுஷ்மாவை பார்த்து பெருமிதம் அடைந்தார். பேசிமுடித்து அமர்ந்த சுஷ்மாவை வாயார பாராட்டவும் அவர் தவறவில்லை.

லோக்சபா இன்று அமளி துமளியாகிவிட்டது. காங்கிரஸ் தரப்பில் கடுமையான புகார்களை ஒரு பக்கம் அடுக்க, அதற்கு, சுஷ்மா அனல் பறக்க பதிலளிக்க பெரும் விவாதக்களமாகி விட்டது லோக்சபா.

, லலித் மோடி விவகாரத்தில் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டுவந்தனர். அந்த விவகாரத்தில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் விவாதத்திற்கு அனுமதிஅளித்தார்.

இதையடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கடும் குற்றச் சாட்டுக்களைச் சுமத்தி விவாதத்தை தொடங்கிவைத்தார். அதற்கு சுஷ்மா சுவராஜ் அனல்பறக்க பதிலளித்தார். அவரது பதிலுரையின்போது, மறைந்த ராஜீவ் காந்தி தொடங்கி விடாமல் புகார்களை அடுக்கினார். குறிப்பாக ராஜீவ் காந்தி போபார்ஸ் ஊழல் நாயகன் குவாத்ரோச்சியிடமிருந்து பணம் பெற்றார் என்று அவர் கூறியபோது சோனியாகாந்தி கொந்தளித்து போராட்டத்தில் குதித்தார்.

ஆனாலும் விடாமல் தனது பேச்சை தொடர்ந்தார் சுஷ்மா. அவர் பேசப்பேச அருகில் அமர்ந்திருந்த மூத்த தலைவர் அத்வானி மேசையைத் தட்டியபடியும், கைகளை தட்டியபடியும் சுஷ்மாவின் பதிலுரையை பாராட்டிக் கொண்டிருந்தார். அவரதுமுகமே உணர்ச்சிகரமாக இருந்தது. பெருமிதத்துடன் அவர் சுஷ்மா பேச்சைப் பார்த்துக் கொண்டிருந்தார். அரை மணி நேரம் அனல் பறக்கப் பேசிய சுஷ்மா பின்னர் அமர்ந்தபோது, அவரை வெகுவாக பாராட்டினார் அத்வானி.

Tags:

Leave a Reply