பாராளுமன்றத்தை முடக்கிவரும் காங்கிரஸ் ., எம்.பி.,க்கள் மீது புகார்மனு கொடுக்க பா.ஜ.க., தலமையிலான தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள், ஜனாதிபதி மாளிகைநோக்கி பேரணியாக சென்றனர்.24 நாட்களாக நடந்த பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முற்றிலும் எதிர் கட்சியினர் அமளியால் ஸ்தம்பித்து போனது. இதனால் எவ்வித அலுவலும் நடக்கவில்லை. பார்லி., நடக்காததால் மக்களின் பலகோடி வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.

இது ஜனநாயகத்திற்கு எதிரானது என பா.ஜ,. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எதிர்க்கட்சயினர் மீது புகார்கொடுக்க பா.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் பேரணியாக சென்றனர்.

விஜய்சவுக் பகுதியில் இருந்து ஜனாதிபதி மாளிகைவரை மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு , ஜிதநே்திர சிங், ரவிசங்கர் பிரசாத், ஸ்மிருதி இராணி, உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களும், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி , கூட்டணி எம்.பி.,க்களும் இந்தபேரணியில் பங்கேற்றனர். ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் என எம்.பி.,க்கள் குழுவினர் ஜனாதிபதியை சந்தித்து மனு கொடுக்கவுள்ளனர்.

தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில்;

காங்கிரஸ் தனது குடும்பத்தை மட்டுமே காக்க நினைக்கிறது. ஆனால் பா.ஜ.க, நாட்டை காப்பாற்ற விரும்புகிறது. ஆட்சிபொறுப்பு குடும்பத்திற்கே சொந்தமாக இருக்கவேண்டும் என காங்., நினைக்கிறது. காங்கிரசின் செயல்பாடு நெருக்கடி நிலைபோல் உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக பிரதமர் உள்ளிட்ட பலர் பங்கேற்ற தே.ஜ., பாராளுமன்ற குழு கூட்டத்தில் காங்கிரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றபட்டது. காங்கிரசின் செயல்பாட்டை நாடுமுழுவதும் பிரசாரம்செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

Tags:

Leave a Reply