69-வது சுதந்திர தினத்தை இந்த நாடு கொண்டாடிக் கொண்டிருக்கிறது. 68 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் ஒவ்வொரு வீட்டின் அடிப்படை தேவைகளும் பூர்த்தி செய்யபட்டிருக்க வேண்டும். நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு முழுமையடைந்திருக்க வேண்டும். அது குறைபட்டிருந்தாலும் இன்று இந்த நாடு நிறைவை நோக்கி நடைபோடுகிறது.

வங்கிக் கணக்கில்லாத ஏழைகள் இல்லை என்ற நிலை, பின்பு ஏழைகளே இல்லை என்ற நிலையை நோக்கி இன்று பாரதம் வேகமாக முன்னேறி வருகிறது. காப்பீடு என்பது மக்கள் அனைவரையும் காப்பது என்று, பிரதமரின் காப்பீட்டுத் திட்டங்கள் மக்களை காப்பதில் முன்னணி வகிக்கிறது.

சீனா சீக்கிரம் பின்னுக்குத் தள்ளப்பட்டு நம் பொருளாதாரம் முன்னுக்கு துள்ளி முன்னோட்டம் காணும் அறிகுறிகள் தென்படுகிறது. தீவிரவாதம் தீவிரமாகக் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

பகிர்ந்தளித்து பசியில்லாத பாரதம் படைக்கும் பணி பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களால் பலமாக திட்டமிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. லஞ்சம் இல்லாத பாரதம் வஞ்சம் இல்லாமல் படைக்கப்பட்டு வருகிறது.

இளைய தலைமுறையின் எதிர்காலம் இனிதாக கண்ணில் தெரிகிறது. ஆக ஒட்டு மொத்தமாக மோடி அவர்களின் ஆட்சியில் நல்ல முன்னேற்றத்தை ஒவ்வொரு வரையும் நாடி வருகிறது என்பதே உண்மை.

அனைவருக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், செய்ய தொழில், கற்க கல்வி கிடைத்திட இந்த சுதந்திர தினம் நிச்சயம் வழி செய்யும். அதற்கு மோடி அரசு வழிவகுக்கும்.

அனைவருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சுதந்திர தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு
என்றும் மக்கள் பணியில்

(டாக்டர் .தமிழிசை சௌந்தரராஜன்)

Leave a Reply