நாட்டின் 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட் டையில் மூவர்ண தேசியக்கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றிவைத்து தனது இரண்டாவது சுதந்திர தினஉரையை ஆற்றினார்.

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் குண்டு துளைக்காத தடுப்பின்றி மோடி சுதந்திர தின உரையாற்றினார்.

அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துக்கள், இது வழக்கமான காலை இல்லை. கனவுகளின் நம்பிக்கை மற்றும் 125 கோடி இந்தியர்களின் ஆசைகள் அடங்கிய காலைநேரம் இது. இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட, தியாகம் செய்த அனைவருக்கும் எனது அஞ்சலியை செலுத்து தலை வணங்குகிறேன்.

இந்தியா பல வேற்றுமைகளுக்கு இடையே ஒற்றுமையை பேணிக் காக்கும் நாடு. இதுவே நமது மிகப்பெரிய பலமும்கூட. நமது ஒற்றுமையும் ஒருமைப்பாடும் தான் நமது கனவுகளை நிறைவேற்ற உதவும். நமது ஒற்றுமையை குலைக்க எந்தசக்திக்கும் இடமளிக்க கூடாது. இந்தியாவில் சாதி மற்றும் மத ரீதியான வேறு பாடுகளுக்கு இடமில்லை. அவைகளை எந்த வகையிலும் பொறுத்துக்கொள்ள முடியாது. வளர்ச்சியின் மூலம் ஜாதியம் மற்றும் மத வாதத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.

இந்தியாவின் முன்னேற்றத்திற்கு 125 கோடி இந்தியர்களும் ஒரேகுழுவாக செயல்பட வேண்டும். இந்த காலை உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தினுடையது. வேறுபாடுகள், கலாச்சார வேற்றுமைகளை கலைந் திடுவோம். ஒருங்கிணைந்தது இந்தியா ஒன்றுதான். ஒற்றுமைதான் நமது ஜனநாயகத்தின் மிகப்பெரிய சொத்து. இந்த அணி நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டுசெல்லும்.

அனைத்து திட்டங்களும் ஏழைகளுக்கானது: யாரும் ஏழையாக இருக்க விரும்பு வதில்லை. யார் ஒருவர் ஏழையாக இருக்க விரும்புகிறாரோ அவர் வறுமையை நோக்கிசெல்கிறார் என்று அர்த்தம். அதுனாலேயே எங்களின் அனைத்து திட்டங்களும் ஏழைகளுக்கு முன்னுரிமை அளித்து ஏற்படுத்தப் பட்டுள்ளது. நமது அனைத்து திட்டங்களும் இந்ததேசத்தின் ஏழைகளுக்கு பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும். ஒரே ஆண்டில் நம் இந்தியா ஒரு புது நம்பிக்கையுடன் செயல்பட்டுவருகிறது.

கடந்த ஆண்டு, நான் அனைவருக்கும் வங்கி கணக்கு துவங்கும் ஜன்தன் யோஜனா பற்றி பேசினேன். அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்த பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்று நினைத்தோம். இன்று ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் 17 கோடி மக்கள் வங்கிகணக்குகளை தொடங்கி உள்ளனர். ஏழைமக்களின் புதிய வங்கி கணக்குகளில் 20 ஆயிரம்கோடி ரூபாய் அளவிற்கு பணம் இருக்கிறது. இன்று வங்கிகள் ஏழைகளுக்காக இயங்குகின்றன.

நமது "டீம் இந்தியா" குழுவின் உழைப்பால் தான் இந்த சாதனை சாத்தியமாயிற்று. இதை நான் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வங்கிகள் ஏழைகளுக்கு திறக்கப்பட வில்லை. அதனாலேயே அதனை முடிவுக்கு கொண்டுவருவதற்காக நிதி துறையை பலப்படுத்த எண்ணினோம். தேர்தல் வாக்குறுதியான காப்பீடு ஓய்வூதிய திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

பொருளாதாரம் வலுவாக இருந்தால் தான் வளர்ச்சி மூலம் ஏழைகளை மேம்படுத்த முடியும். அனைத்து மக்களும் பொருளாதார வளர்ச்சியால் பயனடையவேண்டும். வங்கி கணக்குகளை துவங்குவதுடன் மட்டுமல்ல, ஏழைமக்களுக்கு காப்பீடு வசதியையும் அளித்துள்ளோம். நமது இலக்கை அடைந்து விடலாம் என்ற நம்பிக்கையை இது காட்டுகிறது.

அனைத்து அரசுகளும் திட்டங்களை தீட்டினாலும் நடைமுறைப் படுத்துகிறதா என்பது கேள்விதான். ஏழைகளுக்கு திறக்காதவங்கி கணக்குகளை திறந்து விடுவதே எங்கள்நோக்கம். நமது எண்ணம் செயல் அனைத்திலும் ஏழ்மையை ஒழிப்பதில் செலவிடவேண்டும்.

இன்று தூய்மை இந்தியாவின் தூதுவராக இருப்ப வர்கள் குழந்தைகள். நாட்டை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு நான் தலைவணங்குகிறேன். மக்களின் ஒத்துழைப்பால் தூய்மை இந்தியா திட்டம் சாத்தியமாகி யுள்ளது. மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் அன்று ஒரு தூய்மையான இந்தியாவை அவருக்கு சமர்பிக்க அனைவரும் பாடுபடவேண்டும்.

கடந்த ஆண்டு செங்கோட்டையில் கழிவறைகள் மற்றும் சுத்தம் குறித்து பேசினேன். என்ன பிரதமர் இவர், இது போன்ற விஷயங்களை பேசுகிறார் என அனைவரும் அதிசயித்தனர். அது ஒவ்வொருவரையும் சென்றடைந்தது. அது சுத்தம்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. மக்கள், ஆன்மிக தலைவர்கள், மீடியா நண்பர்கள், பிரபலங்கள் என அனைவரும் சுத்தம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் இறங்கினர்.ஒராண்டுகளில் நாடுமுழுவதும் பள்ளிகளில் 4.25 லட்சம் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. பள்ளிகளில் கழிவறைகள் கட்டும்பணியை நிறைவேற்றிய அனைத்து பள்ளிகள், மாநில அரசுக்கும் நன்றி.

தொழிலார்களின் கவுரவத்தை காப்பது நமது நாட்டின்கடமை. அரசின் அனைத்து திட்டங்களும் ஏழைகளுக்கான திட்டமாகவே இருக்கும். இந்தியாவின் உழைக்கும் வர்க்கத்திற்காக உழைப்பே வெல்லும் "ஸ்ரமேவ ஜெயதே யோஜனா" என்ற திட்டம் கொண்டுவரப்படும். இது இந்திய தொழிலாளர்களின் பாதையை மாற்றும் முயற்சி. இதன்மூலம் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தனி அடையாள அட்டைவழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். ஊழலை ஒழிப்பதற்கான முயற்சி மேல்மட்டங் களிலிருந்து தொடங்கி பொது மக்கள் வரை பரவவேண்டும். ஊழலற்ற இந்தியாவை உருவாக்க முடியும் என நம்புவோம்.

இடைத் தரகர்களை விலக்கி, ஊழலை ஒழிக்க நினைக்கும் விதமாக, சமையல் எரிவாயுமானியம் என்ற பெயரில் ஆண்டுதோறும் வீணான 15 ஆயிரம் கோடி தடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 20 லட்சம் இந்தியர்கள் சமையல் எரிவாயு மானியத்தை வேண்டாம் என்று விட்டுகொடுத் துள்ளனர். இதன் மூலம் 20 லட்சம் ஏழைகள் பயனடைந்துள்ளனர். மானியத்தை விட்டுக்கொடுக்க இயன்றவர்கள் முன்வர வேண்டும்.

இந்தியர்கள் திறந்தமனம் படைத்தவர்கள்: இந்தியா ஊழல் இல்லாத நாடாக மாறும். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை ரூ.3 லட்சம்கோடி அளவிற்கு உயர்த்தி உள்ளோம். நான் நிலக்கரி சுரங்கம் பற்றிதான் பேசுகிறேன். இதனை அரசியலுடன் தொடர்பு படுத்தாதீர்கள். இதில் அரசியலுக்கு இடமில்லை.

இந்தியாவில் தொழில்புரட்சி ஏற்பட வேண்டும் இதற்கு நாட்டில் உள்ள ஒருகோடியே 25 லட்சம் வங்கிகள் உதவி செய்ய வேண்டும். ஒவ்வொரு வங்கியின் கிளையும் ஒருதலித் அல்லது பழங்குடியினருக்காவது தொழில்செய்ய கடன் உதவி செய்ய வேண்டும். பெண்களுக்கும் வங்கிகள் தொழில் கடன்கள் வழங்கி அவர்கள் வாழ்க்கைதரம் உயர உதவ வேண்டும்.

நாடுமுழுவதும் உள்ள மின் இணைப்பு இல்லாத 18 ஆயிரத்து 500 கிராமங்களுக்கு அடுத்த 1000 நாட்களில் மின்சாரவசதி வழங்கப்படும். மின்துறை அதிகாரிகளிடம் நான் பேசியபோது இன்னும் எத்தனை காலங்களில் முழுமையான மின்வசதி பெறும் என கேட்டதற்கு, அதற்கு, 2019-ம் ஆண்டில்தான் முடியும் என பதில் அளித்தனர். அத்தனை நாட்கள் காத்திருக்க முடியாது என கூறினேன். அதனால்தான் அடுத்த 1000 நாட்களில் கிராமங்களுக்கு மின்வசதி வழங்க டீம் இந்தியா உறுதி பூண்டுள்ளது.

வேளாண் அமைச்சகத்திற்கு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சகம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. விவசாயிகள் நலன்காக்க அமைச்சகத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது

நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் வேளாண் உற்பத்தியை அதிகரிப்பது அவசியம். குடிநீர், மின்சாரம், உரம் ஆகியவற்றை பாதுகாப்பதே நமதுகடமை.

ராணுவத் தினருக்கான ஒரே பதவி ஒரே ஓய்வுதியம் திட்டம் 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்ததிட்டத்தை கொள்கை அளவில் ஏற்கிறோம். திட்டத்தின் அனைத்து நிலையும் அரசு ஆய்வுசெய்து வருகிறது. ஆனால் இதற்கு எந்ததீர்வும் காணப்பட வில்லை. என்னாலும் இதை தீர்க்க முடிய வில்லை. ஆனால் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இதை விரைவில் தகுதி அடிப்படையில் செயல் படுத்துவோம்.

இந்திய தேசிய கொடியை சாட்சியாக வைத்து சொல்கிறேன். கடந்த ஓராண்டில் எனது அரசுமீது ஒரு ரூபாய் கூட ஒரு ஊழல்கூட நடைபெறவில்லை. ஊழலற்ற இந்தியா உருவாகி வருகிறது என்பது உறுதியாக சொல்ல முடியும்.

கருப்பு பணத்திற்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது இனி யாரும் வெளிநாட்டில் கருப்பு பணத்தை பதுக்க முடியாது என்பதை உறுதி செய்துள்ளது. கடந்த ஓராண்டில் வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதல் கட்டமாக ரூ.6500 கோடி மதிப்பிலான கருப்பு பணம் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஜி 20 மாநாட்டில் கருப்பு பணத்தை மீட்க சர்வதேச உதவியை நாடினேன். கருப்பு பணம் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கமுடியாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நமது தேச தலைவர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்தனர். ஆனால் தங்களின் சுதந்திர கனவுகளை அவர்கள் கைவிடவில்லை. உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் உருவான நாள் இது. ஜனநாயகத்தில், மக்களின் பங்கு தான் பலம். கடந்த ஆண்டு எனக்கு புதிய ஆண்டாக இருந்தது. இந்தியா பற்றிய நம்பிக்கையும், கனவுகளும் என் முன் இருந்தது. ஆனால் தற்போது டீம் இந்தியா எனக்கு புதிய நம்பிக்கை தந்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஓராண்டில் "டீம் இந்தியா" புதிய நம்பிக்கையுடன் அனைத்து கனவுகளையும் பூர்த்தி செய்யும் என வாக்களிக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.