அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ள பிரதமர் இன்று மஸ்தார் நகர் பகுதியை பார்வையிட்டார்.

தலை நகர் அபுதாபியில் உள்ள மஸ்தார் நகரில் பயன் படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்கள், குறித்து வல்லுனர்களிடம் கேட்டறிந்த மோடி, அங்கு காட்சிக்காக வைக்கப் பட்டிருந்த பேட்டரி காரிலும் பயணம்செய்தார். அதனை தொடர்ந்து தனது வருகையை பதிவுசெய்யும் விதமாக, மின்னணு பலகையில் கையெழுத்திட்ட பிரதமர் , அங்கு கூடியிருந்தவர்களிடமும் சிறிதுநேரம் பேசினார்.

மஸ்தாரில் தனது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மதியம் துபாய் செல்லும் பிரதமர் மோடி, ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபர் ஷேக் முகமதுபின் ராஷித் அல் மக்தூம் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பின்னர் இன்று மாலை துபாயில் உள்ள சர்வதேசவிளையாட்டு மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

Tags:

Leave a Reply