வாகன தொழில் நுட்பம், எரிபொருள், புகைமாசு தொடர்பாக சாலை போக்குவரத்து அமைச்சகத்தில் தனி துறை தொடங்கப்படும் என்று மத்திய சாலைப்போக்கு வரத்து, நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: சாலை போக்குவரத்தில் தனிதுறை தொடங்க திட்ட மிட்டுள்ளோம்.

இதற்கான அனுமதிகோரி மத்திய அமைச்சரவை, பிரதமர் மோடி ஆகியோருக்கு விரைவில் பரிந்துரை அனுப்பப்படும்.

தொழில்நுட்பம், எரிபொருள், புகைமாசு உள்ளிட்ட விவகாரங்களை தனிதுறை கவனித்து கொள்ளும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply