அதிகாரத்தை பயன் படுத்தி ஊழல்செய்வது காங்கிரஸின் கலாசாரம் என கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.

பெங்களூரு மாநகராட்சி தேர்தலையொட்டி அல்சூர், ஜோகு பாளையா, எலஹங்கா உள்ளிட்ட பகுதிகளில் பாஜக சார்பில் ஞாயிற்றுக் கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் பேசியது: மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டுள்ளது. ஆனால், மத்தியில் பாஜக ஊழலில்ஈடுபட்டு வருவதாக முதல்வர் சித்தராமையா அண்மையில் பேசியுள்ளார்.

காங்கிரஸ் என்பதற்கு பதிலாக பாஜக என்று அவர் உச்சரித்துள்ளார். அதிகாரத்தை பயன் படுத்தி ஊழலில் ஈடுபடுவது காங்கிரஸின் கலாசாரம். கடந்த இரண்டரை ஆண்டுகளாக பெங்களூரு மாநகராட்சி பாஜக அதிகாரத்தில் இருந்தது. பாஜக அதிகாரத்தில் இருந்த ஒரேகாரணத்துக்காக, நிதியை ஒதுக்காமல் காங்கிரஸ் அரசு அலட்சியம் காட்டியது. கடந்த இரண்டரை ஆண்டுகளில், பெங்களூரின் வளர்ச்சிக்காக மாநிலஅரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. எனது ஆட்சிக் காலத்தில், பெங்களூரு நகரின் வளர்ச்சிக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டது. மக்களின் வளர்ச்சிப்பணிகளில், அக்கறை கொண்ட கட்சியாக பாஜக விளங்குகிறது.

மத்தியில் பிரதமர் மோடியின் ஆட்சியில், பல்வேறு துறைகளில் நாடு வளர்ச்சியடைந்து வருகிறது. பெங்களூரின் வளர்ச்சிக்காக, தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரிக்கவேண்டும் என்றார் அவர்.

Tags:

Leave a Reply