இந்தியாவின் தேசிய வங்கி களுக்கான ஊழியர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் கல்லூரிகளில் நேர்காணல் நடத்தில் வங்கிகளுக்கான ஊழியர்களை தேர்வுசெய்யலாம், என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பாரதஸ்டேட் வங்கி, ஐ.டி.பி.ஐ., பாரதீய மகளிர் வங்கி உள்பட 22 தேசிய வங்கிகள் உள்ளன. இதில் பணிபுரியும் மூத்த அதிகாரிகள், ஊழியர்கள் 78 ஆயிரத்து 800 பேர் அடுத்த 2 ஆண்டுகளில் ஓய்வு பெறுகிறார்கள்.

இந்த நிதி ஆண்டில் (2015-2016) மட்டும் 39 ஆயிரத்து 756 பேர் பணி ஓய்வுபெறுகிறார்கள். அவர்களில் 19 ஆயிரத்து 65 பேர் அதிகாரிகள், 14 ஆயிரத்து 669 பேர் ஊழியர்கள், 6 ஆயிரத்து 22 பேர் உதவியாளர்கள் ஆவார்கள்.

அடுத்த நிதி ஆண்டில் (2016-2017) 39 ஆயிரம்பேர் ஓய்வு பெறுகிறார்கள். அதில் 18 ஆயிரத்து 506 பேர் அதிகாரிகள், 14 ஆயிரத்து 458 பேர் ஊழியர்கள் ஆவர். புதியஊழியர்களை தேர்வுசெய்யும் பணியில் வங்கிகள் இறங்கி உள்ளன. இதற்கான எளிய வழிமுறைகளை, மத்திய அரசின் நிதி அமைச்சகம் வகுத்து கொடுத்துள்ளது.

இதன் முதல் கட்டமாக, ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் தேர்வு செய்யப் படுகிறார்கள். இதுதொடர்பாக கடந்த வாரம் பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:

கல்லூரிகளில் நேர்காணல் மூலம் வங்கிகளுக்கான ஊழியர்தேர்வை நடத்தலாம். ஆனால் இதில் சட்டச் சிக்கல் உள்ளது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு போதிய வழிமுறைகளை வழங்கவில்லை. இது வங்கி ஊழியர்தேர்வில் முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் சட்டவழிமுறைகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். இவ்வாறு அருண் ஜெட்லி தெரிவித்தார்.

Tags:

Leave a Reply