போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அவசர ஆலோசனை நடைப்பெற்றது.

காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் கடந்த சில நாள்களாக அத்துமீறி தாக்குதல் நடத்து வருகின்றனர். இதனால் தாக்குதலுக்கு அஞ்சி எல்லையோர கிராம மக்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.

மேலும், சனிக்கிழமை பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 பேர் பலியாயினர். இந்த சூழ்நிலையில், இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.

காஷ்மீரில் உள்ள பூஞ்ச் செக்டார் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த 24மணி நேரத்திற்குள் 5முறை அத்து மீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் எல்லையோர கிராமங்களில் வீடுகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. இந்த சூழலில் எல்லை நிலவரம் குறித்து உள்துறை செயலாளர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று காலை அவசர ஆலோசனை நடத்தினார்.

சத்தீஸ்கரில் உள்ள பிலாஸ்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர்மனோகர் பாரிக்கர் நிருபர்களிடம் பேசுகையில் காஷ்மீரில் உள்ள பூஞ்ச் ரஜவுரி உள்ளிட்ட பகுதிகளில் சர்வதேச எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

பாகிஸ்தான் நடத்தும் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில்இரண்டு மடங்கு இந்திய ராணுவத்தினர் பதிலடி தருகிறார்கள் என்றார்.

பூஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் ஒரே நாளில் மட்டும் எட்டுக்கும் மேற்பட்டமுறை பாகிஸ்தான் ராணுவம் தாக்கியுள்ளது. மோட்டார் குண்டுகளை வீசியும் சிறிய ரக பீரங்கி குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லையோர கிராமங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவல் குறித்து கேட்ட போதுமத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறுகையில் எல்லையில் நடைபெறும் அனைத்து வகையான ஊடுருவல்களும் முறியடிக்கப்பட்டு வருகின்றன.பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு இது தொடர்பான முழுமையான விவரங்களை இப்போது தெரிவிக்க இயலாது என்றார்.

Tags:

Leave a Reply