தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இந்துகோவில் உள்ளது. இந்தக் கோவில் அருகே நேற்று மாலை சக்தி வாய்ந்த ஒரு வெடிகுண்டு வெடித்தது. இதில் 27 பேர் பரிதாபமாக பலியானார்கள். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு, உலகத் தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது டிவிட்டரில், தாய்லாந்து தலைநகர், பாங்காக்கில் நடைபெற்றுள்ள குண்டுவெடிப்பு சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். மேலும், இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.

Leave a Reply