இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று, மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ள ரணில் விக்ரம சிங்கேவிற்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிவிட்டரில் பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற ஐக்கிய தேசிய கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மீண்டும் இலங்கை பிரதமராகும் விக்கிரம சிங்கேவின் தலைமையின் கீழ், இந்திய, இலங்கையின் உறவு மேலும் வளர்ச்சிஅடையும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாக மோடி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தேர்தல் அமைதியான முறையில் நடந்துமுடிந்துள்ள நிலையில், அந்நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply